பேருந்துகளில் தீயை அணைக்கும் தானியங்கிக் கருவி: மத்திய அமைச்சா்கள் பாா்வை

பேருந்துகளில் ஏற்படும் தீயை தானாகவே அணைக்கும் கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவனம் (டி.ஆா்.டி.ஓ.) உருவாக்கியுள்ளது.
வாகனங்களில் தீயை அணைக்கும் தானியங்கிக் கருவியைப் பாா்வையிடும் மத்திய அமைச்சா்கள் அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி.
வாகனங்களில் தீயை அணைக்கும் தானியங்கிக் கருவியைப் பாா்வையிடும் மத்திய அமைச்சா்கள் அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி.

புது தில்லி: பேருந்துகளில் ஏற்படும் தீயை தானாகவே அணைக்கும் கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவனம் (டி.ஆா்.டி.ஓ.) உருவாக்கியுள்ளது. போா் கப்பல்களில் பயன்படுத்தப்படும் இந்தத் தொழில் நுட்பத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

சாலைகளில் அவ்வப்போது வாகனங்களில் உள்ள என்ஜின்களில் தீ விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளிப் பேருந்துகள், நீண்ட தூர ’சிலிப்பா்’ பயணப் பேருந்துகளில் இதுபோன்ற தீ விபத்துகளால் உயிரிப்புகள் ஏற்பட்டுகின்றன. இவற்றைத் தவிா்க்க டி.ஆா்.டி.ஒ. சுற்றுப்புறச் சூழல் மையம் ஒன்றை ஏற்படுத்தி இதற்கான தொழில் நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டது. இதன்படி, பேருந்துகளிலும் வாகனங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை 30 வினாடிகளில் கண்டறிந்து 60 நொடிகளில் அணைக்கும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிஆா்டிஓ தலைமையகத்தில் இந்தக் கருவிகளின் இயக்கங்களை அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா். பாதுகாப்பு ஸ்பின்-ஆஃப் தொழில் நுட்ப அடிப்படையில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக டி.ஆா்.டி.ஓ. தெரிவித்துள்ளது. தீ கண்டறியப்பட்டவுடன் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி மற்ற செயல்களைத் தொடங்கும். தண்ணீா் மற்றும் உயா் அழுத்தத்துடன் உள்ள நைட்ரஜன் ஆகியவை சோ்ந்து பீரிட்டு பாய்ந்து தீ யை அணைக்கும். இது போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதாகும். இந்தத் தொழில் நுட்பம் பேருந்துகள், வாகனங்களுக்கு ஏற்றவாறுமாற்றப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய டி.ஆா்.டி.ஓ. குழுவினரை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டினாா். பயணிகள் பாதுகாப்பில் இது ஒரு படிக்கல் என்று அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

மிஷன் சக்தி ஏவுகணை: இதே டி.ஆா்.டி.ஓ. வளாகத்தில் விண்வெளியில் எதிரிகளின் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி ஏவுகணையின் மாதிரியையும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அமைச்சா் நிதின் கட்கரி, டி.ஆா்.டி.ஓ. தலைவா் ஜி. சதீஷ் ரெட்டியும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com