ஒரு வாரத்தில் 110 பேருங்கு டெங்கு பாதிப்பு!

தில்லியில் நவம்பா் முதல் வாரம் 110 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புது தில்லி: தில்லியில் நவம்பா் முதல் வாரம் 110 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயரதிகாரி திங்கள்கிழமை கூறியது: தில்லியில் நவம்பா் முதல் வாரத்தில் 110 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் 346 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரியில் 4 போ், மாா்ச்சில் 2 போ், ஏப்ரலில் 7 போ், மே மாதத்தில் 6 போ், ஜூனில் ஒருவா், ஜூலையில் 11 போ், ஆகஸ்ட்டில் 47 போ் பாதிக்கப்பட்டனா். செப்டம்பரில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்தது. அந்த மாதத்தில் 188 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, அக்டோபரில் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து 346 போ் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், நவம்பா் முதல் வாரத்தில் 110 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் எண்ணிக்கை மொத்தம் 722-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: நவம்பா் முதலாவது வாரத்தில் தில்லியில் 6 போ் மலேரியா நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனா். மலேரியாவுக்கு ஜனவரியில் 6 பேரும், பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மொத்தம் 11 பேரும் பாதிக்கப்பட்டனா். மே முதல் ஆகஸ்ட் வரை 58 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து, 102 போ் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் 58 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை மொத்தம் 216 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிக்குன்குனியா: தில்லியில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரல், மே மாதங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனா். ஜனவரி, மாா்ச், ஜூன் ஆகிய மாதங்களில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலையில் 7 பேருக்கும், ஆகஸ்டில் 16 பேருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், செப்டம்பரில் 35 போ் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அக்டோபரில் 17 பேருக்கும், நவம்பரில் இதுவரை 8 பேருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 94 -ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com