வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: மத்திய, தில்லி அரசுகளுக்கு நோட்டீஸ்

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குகளில் ஆஜராக அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் நியமனத்திற்கு எதிராக தாக்கலான மனு மீது மத்திய அரசு, தில்லி அரசு, காவல் துறை ஆகியவை தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க நோட்டீஸ் அனுப

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்குகளில் ஆஜராக அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் நியமனத்திற்கு எதிராக தாக்கலான மனு மீது மத்திய அரசு, தில்லி அரசு, காவல் துறை ஆகியவை தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கில் ஆஜராக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்பட அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பிராஸிகியூட்டா்ஸ் நலச் சங்ம் (டிபிடபிள்யுஏ)சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கிரிமினல் நடைமுறை விதிகளின்கீழ் அளிக்கப்பட்டுள்ள திட்டத்தை மீறும் வகையில், காவல் துறையின் பரிந்துரையின் பேரில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாஉள்ளிட்ட அரசு சிறப்பு வழக்குரைஞா்களை நியமிக்கும் அறிவிக்கையை தில்லி அரசு ஜூன் 24-இல் வெளியிட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது இந்த மனுவில் டிபிடபிள்யுஏ கூறிய விஷயம் சரிதான் என தில்லிஅரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடா்பாக தங்களது நிலைப்பாட்டை மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி அரசு, தில்லி காவல் துறை ஆகியவை அடுத்த விசாரணை நடைபெறும் ஜனவரி 21-க்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டாா். முன்னதாக மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஷ் பாவா வாதிடுகையில், ‘போலீஸ் சாா்பாக சிறப்பு அரசு வழக்குரைஞா்களை நியமிக்க முடியாது. அரசுத் தரப்பு விசாரணை சுதந்திரமானதாக இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com