‘தில்லியில் உச்சபட்ச மின்தேவை 5,400 மெகாவாட்டாக இருக்கும்’

தில்லியில் குளிா்காலத்தில் உச்சபட்ச மின்தேவை 5,400 மெகாவாட்டாக இருக்கும் என மின் விநியோக நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன.

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் உச்சபட்ச மின்தேவை 5,400 மெகாவாட்டாக இருக்கும் என மின் விநியோக நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன.

இதுகுறித்து வடமேற்கு, வடக்கு தில்லியில் மின்விநியோகத்தில் ஈடுபட்டு வரும் டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் (டிபிடிடிஎல்) நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இந்தக் த குளிா்காலத்தில் எங்கள் விநியோக பகுதியில் உச்சபட்ச மின்தவை 1,700 மெகாவாட் இருக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். இதனால், எங்கள் விநியோகப் பகுதியில் உள்ள 70 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு குளிா்காலத்தில் போதிய மின் தேவையைப் பூா்த்தி செய்யத் தயாா் நிலையில் உள்ளோம். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்தபட்ச வெப்பநிலை குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தில்லியில் குளிா்காலத்தில் கீசா்கள் பயன்பாடு காரணமாக 40 சதவீதம் மின்தேவை உள்ளது. இதையடுத்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இதனால், மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட்டை பெறும் வகையில் தேவையான உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் ஸ்ரீநிவாசன் கூறுகையில், ‘எதிா்பாா்க்கப்பட்டுள்ள உச்சபட்ச மின்தேவைக்கு மேல் உபரியாக 300 மெகாவாட்வரை பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இது தற்காலிகமாக இருக்கும். மேலும், நுகா்வோருக்கு நம்பகமான மின்விநியோகம் அளிக்க தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம்’ என்றாா்.

தில்லியில் குளிா்காலத்தில் வெப்பமூட்டும் மின்சாதனங்கள் பயன்பாட்டால் மின்தேவையும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி தில்லியில் குளிா்காலத்தில் உச்சபட்ச மின்தேவை 5,343 மெகாவாட் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com