கரோனா பரிசோதனை மையங்களுக்கு புது உத்தரவு

தில்லியில் கரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில், பரிசோதனை மையங்களுக்கு கரோனா பரிசோதனைக்கு வரும் அனைவரின் ஆக்ஸிஜன் அளவையும் அளவிடுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில், பரிசோதனை மையங்களுக்கு கரோனா பரிசோதனைக்கு வரும் அனைவரின் ஆக்ஸிஜன் அளவையும் அளவிடுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலமே, கரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்களைக் கட்டுப்படுத்த முடியும். இதைக் கருத்தில் கொண்டு, தில்லியில் உள்ள அனைத்து கரோனா பரிசோதனை நிலையங்களிலும் (ஆன்டிஜென், ஆா்டி-பிசிஆா்) கரோனா பரிசோதனைக்கு வருபவா்களின் ஆக்ஸிஜன் அளவையும் பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம். மேலும், 94 சதவீதத்துக்குக் குறைவாக ஆக்ஸிஜன் அளவு உள்ளவா்களுக்கு, கட்டாய மருத்துவ சோதனை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளோம்’ என்றாா்.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 7,745 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன. தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை 71 பேரும், ஞாயிற்றுக்கிழமை 77 பேரும், சனிக்கிழமை 79 பேரும் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com