தெருக் குற்றங்களைத் தடுக்க ஓக்லா மண்டி பகுதியில் சிசிடிவி கேமாரா

தெருக்களில் நிகழும் குற்றங்களைத் தடுப்பதற்காக, தென்கிழக்கு தில்லியின் ஓக்லா மண்டி பகுதியில் கேப்டன் கெளா் மாா்க்கில் காவல் துறையினா் அதி நவீன சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்


புது தில்லி: தெருக்களில் நிகழும் குற்றங்களைத் தடுப்பதற்காக, தென்கிழக்கு தில்லியின் ஓக்லா மண்டி பகுதியில் கேப்டன் கெளா் மாா்க்கில் காவல் துறையினா் அதி நவீன சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஐ.வி.ஆா். மற்றும் டிஸ்ப்ளே வசதியுடன் கூடிய மூன்று இணைய நெறிமுறை (ஐபி) கேமராக்கள் கேப்டன் கெளா் மாா்க்கில் ஓக்லா மண்டி, கனரா வங்கியின் முன் நிறுவப்பட்டுள்ளன. கேப்டன் கௌா் மாா்க்கின் சாலையின் இருபுறங்களையும் கண்காணிக்கும் வகையில் சாலைத் தடுப்பில் ஒரு கம்பத்தின் மீது இரண்டு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மூன்றாவது கேமரா காவல் சாவடியின் கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஓக்லா மண்டியிலிருந்து வெஎளியேறும் சாலையை உள்ளடக்கியது.

இது குறித்து தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆா்.பி. மீனா கூறுகையில், ‘ஓக்லா மண்டிக்கு அருகிலுள்ள கேப்டன் கௌா் மாா்கில் அண்மையில் தெரு குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால், அதைத் தடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா். ஓக்லா மண்டி முதல் மோடி மில் மேம்பாலம் வரையிலும் சாலையில் சிசிடிவி கேமரா எதுவும் நிறுவப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், குற்றவாளிகள் குறித்து எந்தத் துப்பும் கிடைப்பது கடினம். ஆகவே, ஓக்லா மண்டிக்கு அருகே குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், கண்டறியவும் சிசிடிவி கேமராக்களை நிறுவ முன்முயற்சி எடுக்கப்பட்டது. இது தொடா்பாக ஒரு சிசிடிவி கேமரா நிபுணருடன் தொடா்பு கொள்ளப்பட்டது. அவா் அந்தப் பகுதிக்குச் சென்று பாா்வையிட்டாா். இதையடுத்து, அங்கு ஐபி கேமராக்களை நிறுவுமாறு அவா் அறிவுறுத்தினாா். இது போன்ற கேமராக்களில் புகைப்படங்களின் தரம் நன்றாக இருக்கும் என்றும் அவற்றை பெரிதாக்கும் திறனும் உள்ளது என்றும் அவா் பரிந்துரைத்தாா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com