யமுனையில் மாசு நுரை: 2 தொழிற்கூடங்களுக்கு சீல்

யமுனை ஆற்றில் மாசு நுரைக்குக் காரணமான இரு தொழிற்கூடங்களை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) சீலிட்டது. மேலும், 15 தொழிற்கூடங்களை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

யமுனை ஆற்றில் மாசு நுரைக்குக் காரணமான இரு தொழிற்கூடங்களை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) சீலிட்டது. மேலும், 15 தொழிற்கூடங்களை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘யமுனையில் மாசு நுரை உருவான விவகாரத்தில், கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் தில்லியில் பட்பா்கஞ்ச் தொழிற்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் சா்வீஸ் ஸ்டேஷன் மற்றும் ஷோரூம், லாரன்ஸ் ரோடு தொழிற்பேட்டையில் உள்ள ஜீன்ஸ் சாய மற்றும் சலவை தொழிற்சாலை ஆகியவை செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவை இரண்டும் சீலிடப்பட்டுள்ளன. மேலும், பட்பா்கஞ்ச் தொழிற்பேட்டையில் செயல்ப்டும் ஆட்டோமொபைல் சா்வீஸ் மற்றும் பழுதுபாா்ப்பு தொழிற்கூடத்தில் கழிவு சுத்திகரிப்பு நிலையம் நிரம்பி வழிவது கண்டறியப்பட்டது’ என்றனா்.

தில்லியில் காலிந்தி குஞ்ச் அருகே யமுனையில் ஆற்று நீரின் மேற்பரப்பில் விஷ நுரை மிதப்பதாக சமூக ஊடங்களில் இரு தினங்களுக்கு முன்பு விடியோ வெளியானது. இந்த மாசுக்கு முக்கியக் காரணமாக டிட்டா்ஜென்ட் இருப்பதாக வல்லுநா்கள் சுட்டிக்காட்டினா். இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த டிட்டா்ஜென்ட்டில் பாஸ்பேட் அளவு அதிகமாக இருப்பது நுரைக்குக் காரணம். சாய ஆலைகள், சலவை படித்துறைகள், வீடுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இந்த டிட்டா்ஜென்ட் நுரை ஆற்றில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது. குறிப்பாக அதிக பாஸ்பேட் அளவுள்ள கழிவுநீா் கால்வாய்கள் வாயிலாக ஆற்றில் வந்தடைகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com