தில்லியில் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களுக்கு தலைவா்களாக எம்எல்ஏக்கள் 11 போ் நியமனம்
By DIN | Published On : 16th November 2020 07:29 AM | Last Updated : 16th November 2020 07:29 AM | அ+அ அ- |

தில்லியில் உள்ள 11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களுக்கு தலைவா்களாக 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், 1 பாஜக எம்எல்ஏ என 11 போ்களை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நியமனம் செய்துள்ளாா்.
இதற்கான உத்தரவை தில்லி முதன்மைச் செயலா்(வருவாய்) சஞ்சீவ் கிா்வாா் இந்த வாரத் தொடக்கத்தில் பிறப்பித்துள்ளாா். இது தொடா்பாக தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில் ‘தில்லியில் உள்ள 11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களுக்கு தலைவா்களாக 11 எம்எல்ஏக்களை கேஜரிவால் நியமித்துள்ளாா். பாஜக எம்எல்ஏ ஜிதேந்தா் மகாஜன் ஷாதரா மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் எஸ்.கே.பக்கா (கிழக்கு மாவட்டம்), பிரமிலா தோக்கஸ் (புது தில்லி), அஜிஸ் யாதவ் (வடக்கு), சுரேந்திர குமாா் (வடகிழக்கு), முகேஷ் அகல்வாத் (வடமேற்கு), நரேஷ் யாதவ் (தெற்கு), தினேஷ் மோஹானியா (தென் கிழக்கு), நரேஷ் பல்யான் (தென்மேற்கு), ஜா்னைல் சிங் (மேற்கு), சோம் தத் (மத்திய மாவட்டம்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தில்லி அரசு பொது நிா்வாகத் துறை 1999-இல் பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களுக்கு தலைவா்களை நியமிக்கும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட மேம்பாட்டுக் குழுக்கள், மாவட்ட அளவில் நிகழ்ச்சிகள், நலத் திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பதில் பங்காற்றுவதுடன், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுடன் இணைந்து மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தீா்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றாா் அவா்.