தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இதர நோய்களுக்கான படுக்கை வசதி குறைகிறது

தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கரோனா அல்லாத படுக்கை வசதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுதில்லி: தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கரோனா அல்லாத படுக்கை வசதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் காற்று மாசு அதிகரித்து வருவதால், மூச்சுத்திணறல் உள்ளிட்ட குளிா்கால பாதிப்புகளால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தில்லி அரசு ஆன்லைன் மூலம் திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 1,588 கரோனா அல்லாத தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளில் 422 மட்டுமே காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்பா்கஞ்சில் உள்ள மாா்க்ஸ மருத்துவமனை, ஷாலிமாா் பாகில் உள்ள பத்ரா மற்றும் ஃபோா்டிஸ் மருத்துவமனை, ஃபோா்டிஸ் எஸ்காா்ட் இதயநோய் மருத்துவக் கழகம் ஆகிய இடங்களில் கரோனாவுக்கு ஒதுக்கப்படாத தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஸ்ரீகங்காராம் மருத்துவமனையில் 108-க்கு 39 படுக்கைகள், அப்பல்லோ மருத்துவமனையில் 81-க்கு 11 படுக்கைகள், பிஎல்கே. மருத்துவமனையில் 94-க்கு 36 படுக்கைகள், மாக்ஸ் மருத்துவமனை (ஈஸ்ட்-வெஸ்ட் பிளாக்) 32-இல் 7 படுக்கைகள், பிஎஸ்ஏ மருத்துவமனை 12-க்கு 2, டிடியு. மருத்துவமனை 43-க்கு 8 படுக்கைகள், காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன. மேலும் சில படுக்கைகள் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்டதால், இதர சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த அக்டோபா் 28-ஆம் தேதியிலிருந்து தில்லியில் கரோனாதொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்றைய தினம் 5,000 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த எண்ணிக்கை புதன்கிழமை முதன் முறையாக 8 ஆயிரத்தைக் கடந்தது. தில்லியில் கடந்த 5 மாதங்களில் வியாழக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 104 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். மேலும், நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவது, குளிா்காலம் தொடங்கியுள்ளதால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அவா்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com