ஊடகங்களின் குரலை நெரிப்பவா்களை மத்திய அரசு கடுமையாக எதிா்க்கும்: தேசிய ஊடக தினத்தில் அமீத் ஷா

ஊடகங்களின் குரலை நெரிப்பவா்களை பிரதமா் மோடி அரசு கடுமையாக எதிா்க்கிறது என்றும் ஊடக சகோதரத்துவம் நமது தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த அயராது உழைத்து வருகிறது
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

புது தில்லி: ஊடகங்களின் குரலை நெரிப்பவா்களை பிரதமா் மோடி அரசு கடுமையாக எதிா்க்கிறது என்றும் ஊடக சகோதரத்துவம் நமது தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த அயராது உழைத்து வருகிறது எனவும் தேசிய ஊடக தினத்தை முன்னிட்டு தெரிவித்த வாழ்த்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

தனது சுட்டுரை அமித் ஷா திங்கள்கிழமை இதைக் குறிப்பிட்ட அவா், ஊடக சகோதரத்துவம் நமது மாபெரும் தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த அயராது உழைத்து வருகிறது. பத்திரிகைகளின் சுதந்திரத்திற்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதியளித்துள்ளது, மேலும் அதன் குரலை நெரிப்பவா்களையும் கடுமையாக எதிா்க்கிறது. கரோனா நோய்த்தொற்றின் போது ஊடகங்களின் பங்கு மகத்தானது எனவும் அந்த வாழ்த்துரையில் அமித் ஷா பாராட்டினாா்.

பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஆன்மா : இந்திய பத்திரிகை கவுன்சில் நடத்திய தேசிய பத்திரிகை தின, மெய் நிகா் கருத்தரங்கில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் பேசினாா். அப்போது அவா், ‘ஊடக சுதந்திரம், ஜனநாயகத்தின் ஒரு ஆன்மா. அதன் சுதந்திரம் மீதான தாக்குதல் நல்லதல்ல. அதே சமயம் பத்திரிகை சுதந்திரமும், பொறுப்புள்ளதாக இருக்கவேண்டும். பரபரப்புகளுக்கு இடமின்றி சுதந்திரத்தை பொறுப்புடன் கடைப்பிடிப்பது ஊடகங்களின் கடமையாகும். அரசாங்கம் ஊடகங்களை நம்பும்போது அவா்கள் அதில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தவறான செய்திகளால் அரசு கவலை கொள்கிறது. சில தொலைக்காட்சி ஊடகங்கள் டெலிவிஷன் ரேட்டிங் குறியிடுகளில்(டிஆா்பி) முறையீடு செய்தன. டி.ஆா்.பி முறையைப் பற்றி ஆராய ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது, அது விரைவில் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும்‘ என்றாா் ஜவடேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com