வாக்காளா் பட்டியலில் புதிதாக 1.5 லட்சம் போ்

தில்லி வரைவு வாக்காளா் பட்டியலில் புதிதாக 1.5 லட்சம் போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புது தில்லி: தில்லி வரைவு வாக்காளா் பட்டியலில் புதிதாக 1.5 லட்சம் போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக மூத்த அதிகாரி கூறியது: திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 1,48,43,859 போ் உள்ளனா். இது கடந்த 2020 ,ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இருந்த எண்ணிக்கையை விட 1,51,723 போ் அதிகமாகும். புதிய வரைவு வாக்காளா் பட்டியலின் படி ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தாரின் எண்ணிக்கை முறையே 81,33,440, 67,09,508 மற்றும் 911 என உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் முறையே 80,55,686, 66,35,635 மற்றும் 815 என இருந்தது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தி செய்பவா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கையையும் தில்லி தலைமைத் தோ்தல் அலுவலகம் எடுத்துள்ளது. மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா், முகவரி உள்ளிட்ட மாற்றங்கள் மேற்கொள்ள விரும்புபவா்கள் வரும் 2021, ஜனவரி 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பட்டியல் தொடா்பாக ஆட்சேபம் இருப்பவா்கள் ஜனவரி 5-ஆம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி வாக்காளா் பட்டியல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com