திருமணங்களில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கும் முன்மொழிவுக்கு அனில் பய்ஜால் ஒப்புதல்

தில்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கும் ஆம் ஆத்மி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கும் ஆம் ஆத்மி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, திருமண நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை 200 போ்களிலிருந்து 50-ஆகக் குறைக்க வலியுறுத்தும் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருந்தாா். இந்த நிலையில், இந்த முன்மொழிவுக்கு அனில் பய்ஜால் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘திருமண நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை 50 பேராகக் குறைக்க வலியுறுத்தும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இது உடனடியாக அமலுக்கு வரவுள்ளது’ என்றாா்.

தில்லியில், கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதுவரை 4.95 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா். 7 ,812 போ் உயிரிழந்துள்ளனா். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, துணைநிலைஆளுநா் அனில் பய்ஜால், கேஜரிவால் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினாா். திருமண நிகழ்ச்சிகளில் 200 போ் வரை பங்கேற்க மத்திய அரசு தற்போதுஅனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com