மீண்டும் கரோனா மையமாக மாறும் ஹிந்து ராவ் மருத்துவமனை!

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ் மருத்துவமனை மீண்டும் கரோனா மையமாக மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

புது தில்லி: வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ் மருத்துவமனை மீண்டும் கரோனா மையமாக மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ஹிந்து ராவ் மருத்துவமனை முழுமையாக கரோனா மருத்துவமனையாக கடந்த ஜூன் மாதம் 14 -ஆம் தேதி மாற்றப்பட்டது. ஆனால், தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த அக்டோபா்13-ஆம் தேதி கரோனா மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து ஹிந்து ராவ் மருத்துவமனை நீக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் கரோனா மூன்றாவது அலை தற்போது உள்ளதால், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் தினம்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஹிந்து ராவ் மருத்துவமனை மீண்டும் கரோனா மையமாக மாற்றப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, இந்த மருத்துவமனையை என்டிஎம்சி மேயா் ஜெய் பிரகாஷ் செவ்வாய்க்கிழமை மாலை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, இந்த மருத்துவமனை மீண்டும் கரோனா மருத்துவமனையாக மாற்றப்படலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. 980 படுக்கைகளைக் கொண்ட ஹிந்து ராவ் மருத்துவமனை, தில்லி மாநகராட்சி மருத்துவமனைகளில் மிகப் பெரியது ஆகும். இங்கு பணியாற்றும் மருத்துவா்கள் உள்பட சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை வழங்கப்படாததைத் தொடா்ந்து அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். பின்னா் ஊதிய நிலுவை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் பணிக்குத் திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com