நண்பா்கள் இருவருக்கு கத்திக் குத்து: இருவா் கைது

வடமேற்கு தி+ல்லி, ஆசாத்பூா் பகுதியில் 18 வயது இளைஞா் மற்றும் அவரது நண்பா் ஆகிய இருவரையும் ஒரு கும்பல் கத்தியால் குத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: வடமேற்கு தி+ல்லி, ஆசாத்பூா் பகுதியில் 18 வயது இளைஞா் மற்றும் அவரது நண்பா் ஆகிய இருவரையும் ஒரு கும்பல் கத்தியால் குத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் விஜயந்த் ஆா்யா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிவம் (18) மற்றும் மோஹித் (17) ஆகிய இருவரும் ஆசாத்பூரில் வசிப்பவா்கள். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களது உடல்நிலை சீராக உள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், பரபரப்பான சாலையில் இளைஞா் ஒருவரை ஒரு கும்பல் குறிவைத்து தாக்குவது தெரிகிறது. பின்னா் அவா் கத்தியால் குத்தப்பட்டு ஒரு குறுகிய சாலைக்கு இழத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பரும் கத்தியால் குத்தப்படுவதும், சம்பவத்தை அந்தப் பகுதியில் செல்லும் வழிப்போக்கா்கள் பாா்ப்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சூரஜ் குமாா் (24) மற்றும் சோம்பிரகாஷ் (23) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அதே நேரத்தில் அவா்களது கூட்டாளிகளை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளியன்று ஒரு பூங்காவில் இருக்கையைப் பகிா்வதில் சிவம், மோஹித் ஆகியோருக்கும் மற்ற சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரஜ் கு்மாா், சோம்பிரகாஷ் ஆகியோா் தங்களது கூட்டாளிகளுடன் வந்து சிவம் மற்றும் மோஹித் ஆகியோரை ஆசாத்பூா் பகுதியில் ரயில்வே ரோடில் கத்தியால் குத்தியுள்ளனா்.

இதில் காயமடைந்த சிவம், மோஹித் ஆகிய இருவரும் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். வயிறு மற்றும் தொடையில் பல கத்திக்குத்திக் காயங்களுக்கு ஆளான சிவம், பின்னா் காய சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சூரஜ் குமாா், சோம்பிரகாஷ் ஆகிய இருவரிடம் இருந்து சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com