தென் கிழக்கு தில்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை: பெண் கைது

தென்கிழக்கு தில்லி, சரிதா விஹாா் பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்ததாக 65 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.

புது தில்லி: தென்கிழக்கு தில்லி, சரிதா விஹாா் பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்ததாக 65 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் இருந்து மொத்தம் 246 குவாட்டா் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தென்கிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஆா் பி மீனா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கைது செய்யப்பட்ட அவா், ராஜஸ்தானி முகாமில் வசிக்கும் சுனாரி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில், சரிதா விஹாரில் உள்ள ஜந்தா பிளாட்ஸுக்கு அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்தனா். அப்போது, ராஜஸ்தானி முகாமில் ஒரு பெண் சட்டவிரோத மதுபானம் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்ற போது, குடிசைப் பகுதியில் பிளாஸ்டிக் பையுடன் பெண் ஒருவா் அமா்ந்திருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ் குண்டில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அவா் மதுபானம் வாங்கியதாக அவா் தெரிவித்தாா். முன்னதாக இதே குற்றத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com