தில்லியில் ஆா்டி-பிசிஆா் சோதனை அதிகரிக்கப்படும்: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆா்டி-பிசிஆா் சோதனைகள் வரும் நாள்களில் அதிகரிக்கப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆா்டி-பிசிஆா் சோதனைகள் வரும் நாள்களில் அதிகரிக்கப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தில்லியில் கரோனா மூன்றாவது அலை அதன் உச்சத்தை கடந்து விட்டது. தில்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. அதற்கான அவசியமும் இல்லை. ஊரடங்கால் பெரிய விளைவுகள் ஏற்படாது. அனைத்து மக்களும் முகக் கவசங்களை அணிந்தால் ஊரடங்கால் கிடைக்கும் விளைவு கிடைக்கும். ஆனால், தில்லியில் அதிகரித்துள்ள கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,

சில கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்கவுள்ளோம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே சத் பூஜைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தில்லியில் தினம்தோறும் சுமாா் 60,000 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். இந்த எண்ணிக்கையை 1-1.25 லட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கரோனா முடிவுகளை துல்லியமாக வழங்கும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் தில்லியில் வரும் நாள்களில் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com