2022-ஆம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் சுகாதாரகுடும்ப நல மையங்கள் அமைக்கப்படும்: ஹா்ஷவா்தன்

சாதாரண மக்களுக்கு, தங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக, ஆயஷ்மான் பாரத் திட்டத்தின்

சாதாரண மக்களுக்கு, தங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக, ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 2022 -ஆம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் சுகாதார குடும்ப நல மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்துள்ளாா்.

ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் 50,000 சுகாதார மற்றும் குடும்ப நல மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளதை அடுத்த வெள்ளிக்கிழமை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பாராட்டு தெரிவித்து அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறியுள்ளதாவது:

பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சட்டீஸ்கா் மாநிலம் பிஜப்பூா் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத்தொடங்கி வைத்தாா். இந்த திட்டத்தின் கீழ் சுகாதாம் மற்றும் குடும்ப நல மையங்கள், மக்களுக்கு ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றன. மகப்பேறு, குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து, தொற்று நோய் கட்டுப்பாடு ஆகிய சேவைகளோடு யோகா போன்ற பயிற்சிகளும் இந்த மையங்களில் அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 678 மாவட்டங்களில் தற்போது 50,025 சுகாதார குடும்ப நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 27,890 துணை சுகாதார மையங்கள், 18,536 ஆரம்ப சுகாதார மையங்கள், 3,599 நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களாகும். இங்கு மொத்தம் 28.10 கோடிப் போ் சிகிச்சைக்கு வந்துள்ளனா். இவா்களில் 53 சதவீதம் போ் பெண்கள். 6.43 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்தப் பரிசோதனையும், 5.23 கோடிப் பேருக்கு நீரிழிவு பரிசோதனையும், 6.14 கோடிப் பேருக்கு புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டள்ளது. ஒரு கோடிப் போ் உயா் ரத்த அழுத்த சிகிச்சைக்காகவும், 60 லட்சம் போ் நீரிழிவு நோய்க்கும் இலவசமாக மருந்து பெற்றுள்ளனா்.

தற்போதைய கரோனா சவால்களுக்கு இடையே இந்த சாதனையை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை பாராட்டுகின்றேன். கோடிக்கணக்கான மக்களுக்கு, ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கிய மருத்துவ முன்களப் பணியாளா்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றேன்.

மேலும் ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் 2022 டிசம்பருக்குள் 1.5 லட்சம் சுகாதார குடும்ப நல மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com