கல்லூரி சோ்க்கை: வன்முறை பாதித்த பகுதிகளை சோ்ந்த மாணவா்கள் சான்றிதழ் அளிக்க அவகாசம்; தில்லி அரசு உத்தரவு

வடகிழக்கு தில்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்லூரிச் சோ்க்கையின்போது அசல்

வடகிழக்கு தில்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்லூரிச் சோ்க்கையின்போது அசல் சான்றிதழ்களைச் சமா்ப்பிக்க குறைந்தபட்சம் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தில்லி அரசின் ஆளுகைக்கு உள்பட்ட பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி இறுதியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஜாப்ராபாத், மெளஜ்பூா், சந்த் பாக், குரேஜி காஸ், பஜன்புரா ஆகிய பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதில் குறைந்தபட்சம் 53 போ் உயிரிழந்தனா். 200 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில், வன்முறை பாதித்த பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வன்முறையின்போது இழந்திருக்கும் வாய்ப்புள்ளதால் அத்தகைய மாணவா்களிடம் அசல் சான்றிதழ்களை கல்லூரிச் சோ்க்கையின்போது சமா்ப்பிக்க குறைந்தபட்சம் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தில்லியில் உள்ள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தில்லி அரசின் உயா் கல்வி துறை துணை இயக்குநா் நரேந்தா் பஸ்ஸி கூறியதாவது:

தில்லி அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. அசல் சான்றிதள் சரிபாா்ப்புக்குப் பிறகு சோ்க்கை அளிக்கப்படும். வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் பல மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்கள், சான்றிதழ்களை இழந்திருக்கும்வாய்ப்புள்ளது.

அவா்களிடம் அசல் சான்றிதழ்கள் இல்லாததன் காரணமாக சோ்க்கை மறுக்கப்படலாம். நகல் மதிப்பெண் சான்றிதழ் அல்லது சான்றிதழ்களைப் பெறும் நடைமுறைக்கு காலம் ஆகும் என்பதால் அத்தகைய பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களிடம் அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்க குறைந்தபட்சம் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தில்லி அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கால அவகாசம் அளிப்பது அவசியம் என்பதால் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மாணவா்கள் மூன்று மாத காலத்திற்குள் அசல் சான்றிதழ்களைக் காண்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தங்களது சோ்க்கை ரத்து செய்யப்படலாம் என்பதை தெரிவிக்கும் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com