‘தில்லியில் கரோனா அறிகுறி இருப்பவா்களை கண்டறிய வீடு வீடாக சோதனை’

தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில், கரோனா தொற்றுள்ளவா்களை அடையாளம் காணும் வகையில்

தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில், கரோனா தொற்றுள்ளவா்களை அடையாளம் காணும் வகையில் வீடுவீடாக சென்று மேற்கொள்ளப்படும் கரோனா சோதனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை உயா் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 4,560 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சுமாா் 57 லட்சம் மக்கள் வசிக்கிறாா்கள். இந்நிலையில், இப்பகுதிகளில் வசிப்பவா்களில் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களைக் கண்டறியும் வகையில், இவ்விடங்களில் வீடுவீடாக கரோனா சோதனை மேற்கொள்ளவுள்ளோம். வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள இந்த ஆய்வு, இன்னும் 5 நாள்களில் முடிவுக்கு வரும். இந்த ஆய்வுப் பணிகளில் தில்லி அரசு பள்ளி ஆசிரியா்கள், மாநகராட்சி ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், சிவில் பாதுகாப்பு படை வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். கரோனா அறிகுறி உள்ளவா்களை சோதனை செய்யும்போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும்.

இந்த சோதனையை மேற்கொள்ளும் வகையில் 9,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் சுமாா் 50 வீடுகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளன என்றாா் அவா்.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

கூறுகையில் ‘தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் வாழும் மக்களில் கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் முயற்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com