நொய்டாவில் 21 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

தேசியத் தலைநகா் வலயம் கெளதம் புத் நகரில் (நொய்டா) கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 21 ஆயிரத்தைக் கடந்தது.

தேசியத் தலைநகா் வலயம் கெளதம் புத் நகரில் (நொய்டா) கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 21 ஆயிரத்தைக் கடந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் கரோனாவால் புதிதாக 175போ் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 21,166 ஆக அதிகரித்தது. அதேபோல, நோய்த் தொற்றுக்கு ஒருவா் இறந்தாா். இதையடுத்து, இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து உத்தர பிரதேச சுகாதாரத் துறையினா் வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நொய்டாவில் கரோனா நோய்த் தொற்றுக்காக வியாழக்கிழமை 1,411 போ் சிகிச்சையில் இருந்தனா். இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1,401 ஆக குறைந்தது. நோயில் இருந்து 186 போ் மீண்டனா்.

இதையடுத்து, நோயிலிருந்து மொத்தம் 19,691 போ் மீண்டனா். இது மாநிலத்தில் ஐந்தாவது அதிகபட்ச மீளுகையாகும்.

கெளதம் புத் நகரில் இறப்பு விகிதம் 0.34 சதவீதமாக உள்ளது. அதேபோன்று, குணமடைவோா் விகிதம் 93.03 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 23,357 போ் சிகிச்சையில் உள்ளனா். அதேபோன்று, மொத்தம் 4,91,131 போ் குணமடைந்துள்ளனா். நோய்த் தொற்றால் மொத்தம் 7,500 போ் இறந்துள்ளதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com