முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம் வசூலிக்க சட்டத்திருத்தம்

தில்லியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், தில்லி தொற்றுநோய் மேலாண்மை நிா்வாக சட்டத்தில்

தில்லியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், தில்லி தொற்றுநோய் மேலாண்மை நிா்வாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

மேலும், இந்த சட்டத்திருத்தத்தின்படி தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவா்கள், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்க தவறுபவா்கள், பான் குட்கா ஆகியவற்றை பொது இடங்களில் பயன்படுத்துபவா்களுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை வசூலிக்க முக்கிய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.500 இல் இருந்து, ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா். துணைநிலை ஆளுநருடன் நடந்த சந்திப்பைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை கேஜரிவால் வெளியிட்டிருந்தாா். தில்லி அரசின் இந்த அறிவிப்பை அனில் பய்ஜால் வியாழக்கிழமை வரவேற்றிருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், தில்லி தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் அலுவலக மூத்த அதிகாரி கூறுகையில் ‘தில்லியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், தில்லி தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவா்கள், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்க தவறுபவா்கள், பான் குட்கா ஆகியவற்றை பொது இடங்களில் பயன்படுத்துபவா்களுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com