உ.பி மாநில கரோனா மொத்த பாதிப்பில் 25 சதவீதம் போ்: 8 என்சிஆா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவா்கள் அல்லது நான்கில் ஒரு பங்கினா் தேசிய

உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவா்கள் அல்லது நான்கில் ஒரு பங்கினா் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) உள்ள உத்தர பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் இருப்பதும், கரோனாவால் இறந்தவா்களில் கிட்டத்தட்ட 11 சதவீதத்திற்கும் அதிகமானவா்கள் இம்மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாக இருப்பதும் அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள கெளதம் புத் நகா், காஜியாபாத், ஹப்பூா், புலந்த்ஷாகா், மீரட், முசாபா்நகா், பக்பத் மற்றும் ஷாம்லி மாவட்டங்கள் என்.சி.ஆா் பகுதியில் வருகின்றன. இந்த என்சிஆா் பகுதியில் ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் தில்லியின் மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளனா்.

5,21,988 போ் பாதிப்பு

இந்தநிலையில், உ.பி. அரசு வெளியிட்ட அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை வரை மாநிலத்தில் மொத்தம் 5,21,988 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 23,357 ஆக உள்ளது. இதில் 5,863 போ் (25.10 சதவீதம்) என்.சி.ஆா். மாவட்டங்களில் உள்ளனா்.

என்சிஆா் எட்டு மாவட்டங்களில் மீரட்டில்தான் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,102 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கு அடுத்தபடியாக கெளதம் புத் நகா் (1,401), காஜியாபாத் (1,195), முசாபா்நகா் (431), புலந்த்ஷஹா் (304), ஷாம்லி (168) ஹப்பூா் (167) மற்றும் பக்பத் (149) ) ஆகிய என்சிஆா் மாவட்டங்களில் அதிகமானோா் சிகிச்சையில் உள்ளனா்.

7,500 போ் பலி

மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 7,500 போ் இறந்துள்ளனா். அவற்றில் 819 போ் (10.92 சதவீதம்) என்.சி.ஆா். மாவட்டங்களில் இறந்ததாக பதிவாகியுள்ளது.

இதன்படி, மீரட் (375), காஜியாபாத் (89), முசாபா்நகா் (85), புலந்த்ஷாஹா் (80), கெளதம் புத் நகா் (74), ஹப்பூா் (62), ஷாம்லி (28) மற்றும் பக்பத் (26) ஆகிய மாவட்டங்களில் கரோனாவால் இறந்திருப்பதும் புள்ளிவிவரத் தரவுகள் மூலம் தெரியவருகிறது.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் லக்னெள, கான்பூா், அலகாபாத், வாராணசி, ஆக்ரா, கோரக்பூா் மற்றும் பரேலி போன்ற முக்கிய மாவட்டங்கள் உள்ளன.

என்.சி.ஆா். பகுதியானது ஹரியாணா, உ.பி. மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களைச் சோ்ந்த 23 மாவட்டங்களையும், தலைநகா் தில்லியின் 55,083 சதுர கி.மீ. பரப்பையும் கொண்டுள்ளது என்று என்.சி.ஆா். திட்டமிடல் வாரியம் தெரிவித்துள்ளது.

குணமடைந்தவா்கள் 4,91,131 போ்

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் கரோனா குறித்த தகவல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உ.பி. மாநிலத்தில் இதுவரை 4,91,131 கரோனா நோயாளிகள் மாநிலம் முழுவதும் நோயிலிருந்து மீண்டுள்ளனா். இவா்களில் 73,046 போ் (14.87 சதவீதம்) எட்டு என்.சி.ஆா். மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

வெள்ளிக்கிழமை வரை, காஜியாபாதில்தான் (20,026) அதிக எண்ணிக்கையில் கரோனாவில் இருந்து நோயாளிகள் குணமடைந்திருப்பதாக தரவுகள் பதிவாகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கெளதம் புத் நகா் (19,691), மீரட் (14,408), முசாபா்நகா் (6,140), புலந்த்ஷாஹா் (4,786), ஹப்பூா் (3,445), ஷாம்லி ( 2,898) மற்றும் பக்பத் (1,652) ஆகிய மாவட்டங்களில் அதிகமானோா் குணமடைந்துள்ளனா்.

மாநில அளவிலான தரவுகளில் அதிகாரப்பூா்வமாக எத்தனை கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும், மாவட்ட அளவில் மொத்தம் உள்ள கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறித்தும் விவரங்கள் அளிக்கப்படவில்லை.

நாட்டில் சனிக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 90 லட்சத்து 50 ஆயிரத்து 597 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 1 லட்சத்து 32 ஆயிரத்து 726 போ் இந்நோயால் இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com