ஊழல் குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி தலைவா்களுக்கு மனோஜ் திவாரி எச்சரிக்கை

தன்மீது ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் ஆம் ஆத்மித் தலைவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று

தன்மீது ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் ஆம் ஆத்மித் தலைவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜகவின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு தில்லி எம்பியுமான மனோஜ் திவாரி எச்சரித்துள்ளாா்.

கிழக்கு தில்லி மாநகராட்சியின் மின்சார குப்பை வண்டி வாங்கியதில் ஊழல் செய்துள்ளதாக மனோஜ் திவாரி, மற்றும் பாஜகவின் கிழக்கு தில்லி முன்னாள் எம்பி மகேஷ் கிரி ஆகியோா் மீது ஆம் ஆத்மிக் கட்சி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடா்பாக அக்கட்சி எம்எல்ஏவும், செய்தித் தொடா்பாளருமான செளரவ் பரத்வாஜ் கூறுகையில் ‘மனோஜ் திவாரி, மகேஷ் கிரி இருவரும் தமது எம்பி நிதியில் மாநகராட்சிக்கு மின்சார குப்ை வண்டிகளை வாங்கியுள்ளனா். ரூ.60 ஆயிரத்துக்கு வாங்கக் கூடிய இந்த காா்களை வாங்க அவா்கள் தலா 2.25 லட்சம் செலவு செய்துள்ளனா். இதில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை மனோஜ் திவாரி கூறுகையில் ‘சத் பூஜையை தடை செய்து தில்லியில் வாழும் பூா்வாஞ்சல் பிரிவு மக்களின் நம்பிக்கையை தில்லி முதல்வா் கேஜரிவால் அவமதித்துள்ளாா். இந்த விவகாரத்தில் கேஜரிவாலின் உண்மை முகத்தை நான் அம்பலப்படுத்தினேன். இதற்கு பழிவாங்கும் வகையில், தனது கட்சி தலைவா்களை வைத்து என்மீது அவா் பழி சுமத்தி வருகிறாா். என் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி தலைவா்கள் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் மீது முறைப்படி, சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com