தில்லியில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளை அதிகரித்தது ஐசிஎம்ஆா்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவுப்படி, தில்லியில் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளை இந்திய

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவுப்படி, தில்லியில் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவுப்படி, தில்லியில் தினம்தோறும் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் சோதனையின் அளவை 27 ஆயிரத்தில் இருந்து, 37,200 ஆக ஐசிஎம்ஆா் சனிக்கிழமை அதிகரித்துள்ளது. நவம்பா் 15- ஆம் தேதி 12,055 ஆா்டி-பிசிஆா் சோதனைகளும், நவம்பா் 19- ஆம் தேதி 30,735 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த நவம்பா் மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். அதன்படி, தில்லியில் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் சோதனைகளை இரட்டிப்பாக்குதல், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆா் சாா்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமித் ஷா பிறப்பித்திருந்தாா்.

இதற்கிடையே, நாட்டில் இதுவரை 13 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைச்சகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘நாட்டில் இதுவரை 13 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கடந்த 10 நாள்களில் 1 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com