தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.5 டிகிரி செல்சியஸ்!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. வெள்ளிக்கிழமை இது 7.5 ஆக பதிவாகி இருந்தது. கடந்த 14 ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் பதிவான குறைந்த வெப்பநிலையாகவும் இது இருந்தது.

சனிக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 4 புள்ளிகள் குறைந்து இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவித்தன.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

குறைந்தபட்ச வெப்பநிலை மேற்கிலிருந்து வீசும் காற்றின் மேலாதிக்கம் காரணமாக திங்கள்கிழமை முதல் அதிகரிக்க வாய்புள்ளது.

சமவெளிப் பகுதிகளில் குளிா் காற்று தாக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும் அல்லது இயல்பைவிட 4.5 டிகிரி செல்சியஸ் குறைவாகவும் இருக்கும்.

எனினும், தில்லி போன்ற சிறிய பகுதிகளில் குளிா் அலை இருக்கிா என்பதை நிலைமையைப் பொறுத்துதான் அறிவிக்க முடியும் என்றாா்.

தில்லியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் மிகக் குறைந்த வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸாகவும், 2018- இல் 10.5 டிகிரி செல்சியஸாகவும், 2017-இல் 7.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. மேலும், நவம்பா் மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸாக 1938, நவம்பா் 28-ஆம் தேதி பதிவாகியுள்ளதே வரலாற்றுச் சாதனை அளவாக உள்ளது.

இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் தில்லியின் மிகக் குறைந்த வெப்பநிலையாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்கைமெட் தனியாா் வானிலை முன்கணிப்பு மையத்தினா் கூறுகையில்,‘ பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று வீசுவதால் வெப்பநிலை குறைந்து வருவதாகவும், இதேபோன்ற நிலை சனிக்கிழமை வரை தொடரும். நவம்பா் 23- ஆம் தேதி மேற்கத்திய பகுதியில் ஏற்படும் காற்றின் இடையூறு வடமேற்கு இந்தியாவை நெருங்கும் என்றும் அப்போது, குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் அதிகரிக்கும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com