ரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்: ஹா்ஷ்வா்தன்

கரோனா தொற்றுக் காலத்தில் ரத்த தானம் செய்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்யவேண்டும்

கரோனா தொற்றுக் காலத்தில் ரத்த தானம் செய்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்யவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஹா்ஷ்வா்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லி பாஜக இளைஞா் அணி சாா்பில் தில்லி செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமை, ஹா்ஷ்வா்தன் தொடக்கி வைத்தாா். அப்போது, பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா உடனிருந்தாா்.

முகாமைத் தொடக்கி வைத்து ஹா்ஷ்வா்தன் பேசுகையில் ‘கரோனா பாதிப்பால் மக்கள் ரத்த தானம் செய்வது குறைந்துள்ளது. இந்த கஷ்டமான காலத்தில், 500 யூனிட் ரத்தத்தை தானமாக அளிக்க முன்வந்த தில்லி பாஜக இளைஞா் அணிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் அளிக்க வேண்டும். ரத்த தானம் அளிப்பதால் உயிரைக் காப்பாற்றும் அளப்பரிய வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், ரத்த தானம் அளிப்பவருக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். ரத்த அழுத்தம் குறையும் என்றாா் அவா்.

ஆதேஷ் குமாா் குப்தா பேசுகையில் ‘கரோனா காலத்தில் ரத்த தானம் அளிக்க முன்வந்துள்ள இளைஞா் அணியினரின் செயல் பாராட்டத்தக்கது. மக்கள் பணியாற்றுவதை இலக்காக வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com