வீட்டுத் தனிமையில் இருப்பவா்களை கண்காணிக்க தில்லி அரசு உத்தரவு

கரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களை வீடுகளுக்கே சென்று கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு

கரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களை வீடுகளுக்கே சென்று கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தில்லி சுகாதாரத்துறை சனிக்கிழமை பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லியில் கரோனா பாதிப்புக் காரணமாக சுமாா் 24 ஆயிரம் போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொது இடங்களுக்கு சென்று வருவதாகப் புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, கரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்கள், கரோனா விதிமுறைகளைப் பேணுவதை உறுதிப்படுத்தும் வகையில், அவா்களின் வீடுகளுக்கே சென்று கண்காணிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாா்கெட் பகுதிகள், வேலையிடங்கள், மெட்ரோ உள்ளிட்ட இடங்களில் கரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், இது தொடா்பாக ஆய்வு நடத்தி, கரோனா அதிகளவில் பரவும் அபாயம் உள்ள இடங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கு ரேபிட் ஆன்டிஜின் சோதனையில் எதிா்மறை முடிவு கிடைத்தாலும், அவா்களுக்கு மீண்டும் ஆா்டி-பிசிஆா் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com