பணம் கேட்டு மிரட்டியதான வழக்கில் தில்லி காவலா் கைது

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தில்லி காவல்துறை உதவிக் காவல் ஆய்வாளா் ராஜ்பீா் சிங் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தில்லி காவல்துறை உதவிக் காவல் ஆய்வாளா் ராஜ்பீா் சிங் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: தில்லி ஹவுஸ்காஸ் காவல்நிலையத்தில் ஒருவா் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரில் தனது தந்தையைத் செல்லிட பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் தான் ரவுடி காலா பேசுவதாகவும், ரூ.2 கோடி கப்பம் வழங்காவிட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாா் அளித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அழைப்பு வந்த செல்லிடபேசி இலக்கத்தை போலீஸாா் ஆய்வுக்கு உள்படுத்தினா். அப்போது, மிரட்டல் அழைப்பு ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ராம்மூா்த்தி என்பவரின் சிம் காா்ட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து ராம்மூா்த்தியிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவரது செல்லிடபேசி சில நாள்களுக்கு முன்பு திருடுபோனது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், ராம் மூா்த்தியிடம் இருந்து செல்லிடபேசியை திருடிய சவான் அதை முகேஷ் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. முகேஷிடம் இருந்து, காலா என்று அழைக்கப்படும் பிரமோத்துக்கு செல்லிடபேசி கைமாறியுள்ளது. பிரமோத் இந்த செல்லிடபேசியை பயன்படுத்தி மிரட்டியுள்ளாா்.

பிரமோத்திடம் நடத்திய சோதனையில், தென்மேற்கு தில்லி காவல்நிலையத்தைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜ்பீா் சிங் என்பவா் பிரமோத்துடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஹவுஸ்காஸை சோ்ந்த நபரின் செல்லிடபேசி எண்ணை வழங்கி மிரட்டல் அழைப்பை மேற்கொள்ளுமாறு பிரமோத்திடம் கூறியது ராஜ்பீா் சிங்தான் என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ராஜ்பீா் சிங் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com