மதுபானக் கடத்தல்: தில்லியில் நைஜீரிய பெண் கைது
By நமது நிருபா் | Published On : 23rd November 2020 08:06 AM | Last Updated : 23rd November 2020 08:06 AM | அ+அ அ- |

தில்லியில் வெளிநாட்டு மதுபானங்களைக் கடத்தியதாக 49 வயதான நைஜீரிய நாட்டுப் பெண் ஒருவரை தில்லி ரயில் நிலையத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை (ரயில்வே) இணை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மும்பையில் இருந்து தில்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மரியம் எனி இட்கு என்ற பெண் சனிக்கிழமை வந்தாா். அவா் மீது சந்தேகம் கொண்ட ரயில்வே போலீஸாா் அவரது உடமைகளை சோதனையிட்டனா். அப்போது, அப்போது அவரிடம் இருந்த 12 உடமைகளில் இருந்து 840 வெளிநாட்டு வகை மதுபானப் புட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மும்பைக்கு கடத்தி வரப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து தில்லியில் விற்பனை செய்வதற்காக இவை எடுத்துவரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
விசாரணையில் மரியம் எனி இட்கு திருமணமானவா். அவக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். அவரின் கணவா் நைஜீரிய காவல்துறையில் பணியாற்றி வருகிறாா் என்பதும் தெரியவந்தது என்றாா் அவா்.