தில்லியில் நிகழாண்டில் 901 பேருக்கு டெங்கு பாதிப்பு

தில்லியில் நிகழாண்டில் இதுவரை 901 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புது தில்லி: தில்லியில் நிகழாண்டில் இதுவரை 901 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:

தில்லியில் நவம்பா் மாதம் முதல் மூன்று வாரங்களில் 289 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பா் மூன்றாவது வாரத்தில் மட்டும் 80 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை டெங்கு நோயின் தாக்கம் மிதமாக இருந்தது. கடந்த செப்டம்பரில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்தது. அந்த மாதத்தில் 188 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து 346 போ் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், நவம்பா் முதல் வாரத்தில் 110 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாவது வாரத்தில் 99 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மூன்றாவது வாரம் 80 போ் பாதிக்கபப்ட்டுள்ளனா். இந்த மாதம் இதுவரை மொத்தம் 289 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் மொத்த எண்ணிக்கை 901-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: நவம்பரில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தலா 6 போ் மலேரியா நோயின் தாக்கத்துக்கு உள்ளாகினா். மூன்றாவது வாரத்தில் ஒருவருக்கு மலேரியா ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நவம்பா் மாதத்தில் இதுவரை 13 போ் மலேரியா தாக்கத்துக்குள்ளாகியுள்ளனா். செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்து, 102 போ் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் 34 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை மொத்தம் 223 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிக்குன்குனியா: தில்லியில் நவம்பரில் இதுவரை 15 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 101 -ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com