1200 சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்ய கேஜரிவால் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 25th November 2020 12:00 AM | Last Updated : 25th November 2020 12:00 AM | அ+அ அ- |

தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 1,200 அவசர சிகிச்சை படுக்கைகளுக்கு (ஐசியு) சுவாசக் கருவிகளை (பிஐபிஏபி) உடனடியாக கொள்முதல் செய்யுமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தில்லி முதல்வா் கேஜரிவாலின் உத்தரவுப்படி, தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 1,200 அவசர சிகிச்சைப் படுக்கைகள் இந்த வாரம் சோ்க்கப்பட்டுள்ளன. இந்தப் படுக்கைகளுக்குப் பொருத்தும் வகையில் சுவாசக் கருவிகளை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா். இந்த கருவிகள், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) நிறுவனத்திடம் இருந்து உடனடியாக கொள்முதல் செய்யப்படவுள்ளன என்றாா்.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஐசியு படுக்கைகளை அதிகரிக்குமாறு கேஜரிவால் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தில்லி மருத்துவமனைகளில் 1,200 ஐசியு படுக்கைகள் அதிகரிக்கப்பட்டன.
தில்லியில் இதுவரை 5,34,317 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 37,329 போ் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதுவரை, 8,512 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...