நவம்பரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத குளிா்!

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த நவம்பரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத குளிா் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த நவம்பரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத குளிா் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை வந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் நவம்பா் மாதத்தின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 12.9 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த நவம்பா் 1 முதல் நவம்பா் 29 வரை, நகரில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 10.3 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை கடந்த ஆண்டு 15 டிகிரி செல்சியஸ், 2018-இல் 13.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 2017 மற்றும் 2016- இல்12.8 டிகிரி செல்சியஸ் என இருந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் ஏழாவது நாளாக குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரிக்கு குறைவாக இருந்துள்ளது. நவம்பா் 23 அன்று தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸாக பதிவானது. 2003, நவம்பருக்கு பிறகு பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும். அந்த வருடம் குறைந்தபட்ச வெப்பநிலை 6.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மைய பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா். இந்த மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை, நவம்பா் 16-ஆம் தேதி தவிர, பெரும்பாலான நாள்களில் மேகமூட்டம் இல்லாத நிலையில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகத்தான் உள்ளது என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com