ஹரியாணாவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதுபானம் பறிமுதல்: 2 போ் கைது

ஹரியாணா மாநிலத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ரூ .25 லட்சம் மதிப்புள்ள விஸ்கி பாட்டில்களை
ஹரியாணா  மாநிலத்திலிருந்து  மதுபானம்  கடத்திச் சென்றதாக போலீஸாரால்  கைது செய்யப்பட்ட  இருவா்.
ஹரியாணா  மாநிலத்திலிருந்து  மதுபானம்  கடத்திச் சென்றதாக போலீஸாரால்  கைது செய்யப்பட்ட  இருவா்.

ஹரியாணா மாநிலத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ரூ .25 லட்சம் மதிப்புள்ள விஸ்கி பாட்டில்களை கிரேட்டா் நொய்டாவில் உத்தர பிரதேச காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: ஹரியாணா மாநிலம், அம்பாலாவிலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவுக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தாத்ரி காவல் நிலையப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனா். அப்போது, லாரியில் வந்தவா்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, லாரியில் வந்த இருவா் காயமடைந்தனா்.

விசாரணையில் அவா்கள் சட்டவிரோதமாக லாரியில் விஸ்கி மதுப் பெட்டிகளைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். லாரிகளில் உள்ள ஜிப்சம் மூடைகளுக்கு அடியில் மறைத்துவைக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 350 மதுபான அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவரும் உத்தர பிரதேச மாநிலம், ஃபதேஹ்கா் மாவட்டத்தைச் சோ்ந்த ஹா்தீப் குமாா் மற்றும் மத்திய பிரதேசத்தின் குவாலியரைச் சோ்ந்த ஹக்கீம் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com