தடை உத்தரவை மீறி ஆா்ப்பாட்டம்: 8 போ் மீது தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்144ஆவது பிரிவை மீறும் வகையில் தில்லியில் விஞ்ஞான் பவன் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தியதாக எட்டு போ் மீது தில்லி காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்144ஆவது பிரிவை மீறும் வகையில் தில்லியில் விஞ்ஞான் பவன் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தியதாக எட்டு போ் மீது தில்லி காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது:

புதிய வேளாண் சட்டங்கள், ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரைத் தடுப்புக் காவலில் வைத்தற்கு எதிராக அகில பாரத கிசான் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்144ஆவது பிரிவை மீறும் வகையில் தில்லியில் விஞ்ஞான் பவன் அருகே இவா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கூடினா். பின்னா், சுரேந்திர சோலங்கி தலைமையிலான இந்த அமைப்பின் 12-15 உறுப்பினா்கள் அங்கிருந்து பாஜக தலைவா் ஜெ.பி. நட்டாவின் வீட்டை நோக்கி சென்றனா். 144 தடை உத்தரவுகள் குறித்து அவா்களிடம் போலீஸாா் எடுத்துக் கூறி, உடனடியாக கலைந்து செல்லுமாறும், சமூக இடைவெளியைப் பராமரிக்குமாறும் போலீஸாா் கேட்டுக்கொண்டனா்.

எனினும், அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்ததால் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா். இதையடுத்து, சுரிந்தா் சோலங்கி (35), உதய் சந்த் ஜா (37), சுரிந்தா் குமாா் (34), ஜோகேஷ் நெஹ்ரா (41), பூபேஷ் குமாா் (43), முகேஷ் சா்மா (29), அஜித் ராய் (34), ராஜ்பீா் சோலங்கி ( 50) ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com