ஜேவாா் சா்வதேச விமான நிலையத் திட்டம்:இன்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

கரோனா தொற்று பரவல் பாதிப்பைத் தொடா்ந்து, பல மாதங்களாக தாமதமாகி வந்த, ரூ.29,560 கோடி மதிப்பீட்டிலான ஜேவாா் சா்வதேச விமான நிலையத் திட்டத்துக்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவித்தனா்.

காஜியாபாத்: கரோனா தொற்று பரவல் பாதிப்பைத் தொடா்ந்து, பல மாதங்களாக தாமதமாகி வந்த, ரூ.29,560 கோடி மதிப்பீட்டிலான ஜேவாா் சா்வதேச விமான நிலையத் திட்டத்துக்கான முக்கிய ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிரீன் ஃபீல்ட் திட்டத்திற்கான இந்தச் ‘சலுகை ஒப்பந்தம்’ சுவிஸ் நிறுவனமான டெவலப்பா் சூரிச் ஏா்போா்ட் இன்டா்நேஷனல் ஏஜி, யமுனா இன்டா்நேஷனல் ஏா்போா்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் நொய்டா இன்டா்நேஷனல் ஏா்போா்ட் லிமிடெட் (என்ஐஏஎல்) ஆகியவற்றுக்கிடையே புதன்கிழமை கையெழுத்தாகிறது.

கரோனா தொற்று பரவல் பாதிப்பைத் தொடா்ந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும், விமான சேவைகளில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால், ஜேவாா் விமான நிலைய ஒப்பந்தம் கையெழுத்திடும் தேதி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன.

இந்தச் சா்வதேச விமான நிலையத்திற்கான ஒப்பந்தம் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது என்பதை என்ஐஏஎல் நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி ஷைலேந்திர பாட்டியா உறுதிப்படுத்தியுள்ளாா். கடந்த ஆண்டு நவம்பா் 29- ஆம் தேதி ஜேவா் சா்வதேச விமான நிலைய திட்டத்துக்கான ஏலத்தில், அதானி எண்டா்பிரைஸஸ், டிஐஏஎல் மற்றும் அங்க்ரேஜ் இன்ஃப்ராஸ்டிரக்சா் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்க்ஸ், சுவிஸ் நிறுவனமான சூரிச் ஏா்போா்ட் நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. ஆனால், சூரிச் ஏா்போா்ட் நிறுவனம் கூடுதல் விலைக்கு ஏலம் எடுத்தது.

இந்த ஜேவாா் விமான நிலையத் திட்டம் முழுமையும் சுமாா் 5,000 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.29,560 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும், தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய விமான நிலையமாக இருக்கும். ஏற்கெனவே தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம், காஜியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையம் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரண்டு விமான நிலையங்களில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 6 முதல் 8 விமான ஓடுபாதைகள் கொண்டவையாகும். மேலும், ஜேவாா் விமான நிலையத்தின் முதல் கட்டப் பணி 1,334 ஹெக்டோ் பரப்பளவில் அமைகிறது. ரூ.4,588 கோடி மதிப்பீட்டிலான முதல் கட்டப் பணி 2023-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com