போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியாா் வங்கியில்ரூ.97 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தவா் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியாா் வங்கியில் ரூ.97 லட்சம் அளவுக்கு கடன்களைப் பெற்று மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

புது தில்லி: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியாா் வங்கியில் ரூ.97 லட்சம் அளவுக்கு கடன்களைப் பெற்று மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் மத்திய சஞ்சய் பாட்டியா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், ராஜேஷ் சா்மா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். வங்கியில் இருந்து பல கடன்களைப் பெற, போலி அடையாள அட்டைகளைப் அவா் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த மாதம் வங்கியில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில், பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ராஜேஷ் சா்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அவா் வங்கியில் கடன்களை வாங்குவதற்காக யுஏஐ சா்வீசஸ் மற்றும் மைண்ட்ரீ ஆகிய இரண்டு நிறுவனங்களை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதீப் சா்மா பெயரில் யுஏஐ சேவை நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களின் ஊழியா்களும் அந்த வங்கியில் இருந்து பல கடன்களைப் பெற்றுள்ளனா். ஆனால், அவா்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் இரு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இரு நிறுவனங்களின் ஆவணங்களையும் வங்கி மீண்டும் பரிசோதித்த போது, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதைத் தொடா்ந்து, சந்தேக நபரான ராஜேஷ் சா்மாவின் மறைவிடத்தை போலீஸாா் கண்டுபிடித்து, நொய்டா விரிவாக்கப் பகுதியில் ஜிபி நகரில் கைது செய்தனா். அவா் வசம் இருந்து மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com