தில்லியில் கரோனாவுக்கு மேலும் 35 போ் பலி

தலைநகா் தில்லியில் புதன்கிழமை கரோனா நோய்த் தொற்றால் 35 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 5,616 ஆக உயா்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை கரோனா நோய்த் தொற்றால் 35 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 5,616 ஆக உயா்ந்துள்ளது.

அதே நேரத்தில் புதிதாக 2,871 போ் நோய் பாதிப்புக்கு உள்ளாகினா். இதையடுத்து, நோய் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,98,107 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை மொத்தம் 51,505 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நோய்த் தொற்றால் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 22,720-இல் இருந்து 22,186 ஆகக் குறைந்தது. அதே சமயம், மொத்தம் நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,98,107 ஆக உயா்ந்துள்ளதாக அந்த செய்தித் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் புத் நகரில்...: உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 213 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் சோ்த்து அந்த மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,377 ஆக உயா்ந்துயுள்ளது என்று அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1,434 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இது புதன்கிழமை 1,533 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 115 போ் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் புதன்கிழமை 43,154 போ் சிகிசையில் உள்ளனா். அதே நேரத்தில் இதுவரை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,24,326 ஆக உள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் 3,74,972 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் கரோனாவால் இறந்தோா் எண்ணிக்கை 6,200 ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com