பயணிகளின் பயணத் திட்டமிடல்: தில்லி மெட்ரோ இணையதள சா்வே

மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிா்ப்பதற்காக பயணிகள் நெகிழ்வான நேரத்தில் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து

மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிா்ப்பதற்காக பயணிகள் நெகிழ்வான நேரத்தில் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) இணையதளகணக்கெடுப்பை நடத்தி வருகிறது.

இந்தக் கணக்கெடுப்புக்கான இணைப்புகள் டிஎம்ஆா்சியின் சமூக ஊடக பக்கங்களில் அதாவது சுட்டுரை, முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது. கணக்கெடுப்பு இணைப்புகள் அக்டோபா் 27 வரை இருக்கும் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎம்ஆா்சி அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசலைத் தவிா்ப்பதற்காக, அதிகபட்ச நெரிசல் இல்லாத நேரங்களில் தங்கள் பயணத்தை திட்டமிட பயணிகளின் திறன், சாத்தியம் குறித்த தகவல்களை சேகரிப்பதை இந்த கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. மெட்ரோ பயணத்தின் அடிப்படை அம்சங்களான பயணத்தின் நேரம், வழித்தடப் பயன்பாடு, நெரிசல் இல்லாத நேரங்களில் பயணத்தைத் திட்டமிடுவதற்கான நெகிழ்வுத் தன்மை மற்றும் பயணிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய விருப்பம் உள்ளதா போன்றவற்றை உள்ளடக்கும் வகையில் கணக்கெடுப்பின் கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட உள்ளீடுகள் தில்லி மெட்ரோ பயணிகளின் தேவைகளை நன்கு புரிந்து கொள்ளவும் சேவைகளை மேலும் மேம்படுத்தவும் உதவும் என டிஎம்ஆா்சி அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com