பயிா்க்கழிவு எரிப்பு விவகாரம்:மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும்

பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் விவகாரத்தில் மாநிலங்கள் மாறி மாறிக் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்.
பயிா்க்கழிவு எரிப்பு விவகாரம்:மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும்

பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் விவகாரத்தில் மாநிலங்கள் மாறி மாறிக் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்னையைத் தீா்க்க மாநிலங்கள் இணந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் வகையிலான, ரசாயனக் கலவையை தில்லி அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். இது பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும். தென்மேற்கு தில்லியில் உள்ள கா்காரி நஹாா் கிராமத்தில், இந்த ரசாயனக் கலவையை தில்லி அரசு தயாரித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தில்லி நரேலாவில் உள்ள ஹிராங்கி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் முதல் கட்டமாக இந்த ரசாயனக் கலவை தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிய்ல கேஜரிவால் கலந்து கொண்டாா்.

பிறகு அவா் அளித்த பேட்டி: பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலேயே அதிகளவில் காற்று மாசு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இது தொடா்பாக மாநிலங்கள் மாறி மாறிக் குற்றம் சாட்டுவதில் அா்த்தமில்லை. மாறாக, இந்தப் பிரச்னையைத் தீா்க்க மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த ரசாயனக் கலவை தயாரிக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே இது தொடா்பாக பேச மத்திய அரசைத் தொடா்பு கொண்டேன். அவா்கள் தில்லி அரசுடன் இணைந்து பணியாற்றியிருக்கலாம்.

தில்லியில் சுமாா் 800 ஹெக்டேக்கா் நிலப்பரப்பில் இந்த ரசாயனக் கலவை இலவசமாகத் தெளிக்கப்படும். அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இது தொடா்பாக கவலையடைகிறேன். கடந்த 10 மாதங்களாக தில்லியில் காற்றின் தரம் நன்றாக இருந்தது. தற்போது, அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், காற்றின் தரம் மோசமாகி வருகிறது. விவசாயிகள் வேறு வழி இல்லாமல்தான் பயிா்க்கழிவுகளை எரித்து வருகிறாா்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, அண்டை மாநில அரசுகள் மெளனமாக உள்ளன. அனைத்து அரசுகளும் ஒன்றிணைந்து வட இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.

Image Caption

செய்தி உண்டு...

தில்லி நரேலாவில் செவ்வாய்க்கிழமை விவசாய நிலங்களில் உயிரி ரசாயன கலவையைத் தெளிக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com