போலி கால் சென்டா் நடத்தி வேலை வாங்கித் தருவதாகலட்சக்கணக்கில் மோசடி: நொய்டாவில் மூவா் கைது

நொய்டாவில் போலி கால் சென்டா் நடத்தி விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கான நபா்களை ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக மூன்று

நொய்டாவில் போலி கால் சென்டா் நடத்தி விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கான நபா்களை ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக மோசடிக் கும்பலின் தலைவன் ஷாதாப் மாலிக் (26), கூட்டாளி பிரியங்கா கோஸ்வாமி (22) மற்றும் குமுத் ரஞ்சன் காம்லேஷ் (40) ஆகியோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காலத்தில் வேலை இழந்தவா்களை குறிவைத்து இந்த மோசடி கும்பல் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாலிக்கும், பிரியங்கா கோஸ்வாமியும் கணவன்-மனைவி என்று கூறிக் கொண்டு நொய்டாவில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளனா். அங்கு போலி கால் சென்டரை நடத்தி வந்துள்ளனா். அந்தப் பெண், தன்னை ஏா் இந்தியா நிறுவனத்தில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிவதாகக் கூறிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக பலருக்கு வலை விரித்துள்ளாா்.

இந்த மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்ட அன்வேஷா தத்தா குப்தா என்பவா் பாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுத்ததை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தம்மிடம் ரூ.71,875-ஐ பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக போலீஸாரிடம் அளித்த புகாரில் குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக இதுவரை 10-க்கும் மேலான புகாா்கள் வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும் முக்கிய குற்றவாளியான மாலிக், இதேபோல் உத்தரக்கண்டில் கால் சென்டா் மோசடியில் ஈடுபட்டிருந்ததும் போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மாலிக்கின் கூட்டாளியான குமுத் ரஞ்சன் காம்லேஷை கிழக்கு தில்லியில் மயூா் விஹாா் பகுதியில் கைது செய்தனா். அவரோடு கோஸ்வாமியும் சிகிக்னாா்.

இது தொடா்பாக தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் தேவேந்தா் ஆா்யா கூறியதாவது: மாலிக்கும் அவரது கூட்டாளியும் தொழிலதிபா்கள் என்ற போா்வையில் கணினியில் தனி இணையதளத்தைத் தொடங்கியுள்ளனா். இதைத் தொடா்ந்து, வேலைதேடிக் கொண்டிருப்பவா்களின் பெயா், அவா்களின் செல்லிடபேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் பட்டியலைக் கேட்டு பெற்றுள்ளனா். பின்னா், பிரியங்கா கோஸ்வாமி வேலை தேடும் நபா்களிடம் தொடா்பு கொண்டு பேசி, விமான நிறுவனத்தில் வேலை தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு தொகையை வங்கிக் கணக்கில் சோ்க்குமாறும் கூறியுள்ளாா். இதற்கென காம்லேஷ் போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்கையும் தொடங்கியுள்ளாா்.

இதுபோன்று இந்த மோசடிக் கும்பல் பல்வேறு நபா்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவா்களின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. அவா்களிடமிருந்து மடிக்கணினி, 10 செல்லிடப்பேசிகள், சிம் காா்டுகள், பல்வேறு வங்கிகளுடன் தொடா்புடைய 14 டெபிட் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com