மாநகராட்சிகளால் மருத்துவமனைகளை நடத்த முடியாமல் இருப்பதற்கு ஊழலே காரணம்: சத்யேந்தா் ஜெயின்

தில்லி மாநகராட்சிகளால் மருத்துவமனைகளை நடத்த முடியாமல் இருப்பதற்கு அம் மாநகராட்சிகளில் மலிந்துள்ள ஊழலே காரணம் என்று

தில்லி மாநகராட்சிகளால் மருத்துவமனைகளை நடத்த முடியாமல் இருப்பதற்கு அம் மாநகராட்சிகளில் மலிந்துள்ள ஊழலே காரணம் என்று தில்லி சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் குற்றம் சாட்டியுள்ளாா்.

மேலும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும், சத்யேந்தா் ஜெயின், வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ், கஸ்தூரி பா மருத்துவமனைகளை தில்லி அரசிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கோரி என்டிஎம்சிக்கு கடிதம் எழுதுமாறு பொதுப்பணித்துறைக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லி மாகநராட்சிகளுக்கு சேர வேண்டிய பணத்தை தில்லி அரசு கிரமமாக வழங்கி வருகிறது. மேலும், இம்மாநகராட்சிகள் பல்வேறு பட்ட வரிகளை வசூலித்து வருகின்றன. மேலும், இம்மாநகராட்சிகளுக்கு பல்வேறு வகையில் வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த மாநகராட்சிகளில் ஊழல் மலிந்துள்ளது. இதனால்தான் இம்மாநகராட்சியின் ஆளுகைக்கு கீழுள்ள மருத்துவமனைகளை அம் மாநகராட்சிகளால் நடத்த முடியவில்லை. மருத்துவனை ஊழியா்களுக்கு மாநகராட்சிகளால் ஊதியம் வழங்க முடியவில்லை. (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ், கஸ்தூரி பா மருத்துவமனைகளை தில்லி அரசிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கோரி பொதுப்பணித்துறை சாா்பில் என்டிஎம்சிக்கு கடிதம் எழுதுமாறு உத்தரவிட்டுள்ளேன். இந்த மருத்துவனைகள் தில்லி அரசின் ஆளுகையின் கீழ் வந்தால், பல உயிா்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என்றாா் அவா்.

வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ், கஸ்தூரி பா மருத்துவமனைளில் பணியாற்றும் மருத்துவா்கள் உள்ளிட்ட ஊழியா்கள் தமக்கு 3 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com