என்டிஎம்சிக்கு ரூ.1 கோடி அபராதம்: அமைச்சா் நடவடிக்கை

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) தில்லி சுற்றுச்சூழல் துறை வெள்ளிக்கிழமை

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) தில்லி சுற்றுச்சூழல் துறை வெள்ளிக்கிழமை ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. இதற்கான உத்தரவை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக கோபால் ராய் கூறுகையில்,‘தில்லி கிராரி வில்லேஜ் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில், குப்பைகளை என்டிஎம்சி எரியூட்டி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு என்டிஎம்சி எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இங்கு மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இதனால், என்டிஎம்சிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றாா்.

பால்ஸ்வா குப்பைக் கிடங்கில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) தில்லி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.20 லட்சம் அபராதம் விதித்திருந்தது. முன்னதாக, மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக மத்திய அரசின் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகத்துக்கு (என்சிஆா்டிசி) ரூ.50 லட்சமும், இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பிற்கு (எஃப்ஐசிசிஐ) ரூ.20 லட்சமும், தில்லி பொதுப் பணித் துறைக்கு ரூ.20 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, தில்லி அரசின் தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், சிக்னலில் காத்திருக்கும் போது வாகனங்களின் என்ஜின்களை நிறுத்தும் தில்லி அரசின் ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ பிரசார இயக்கம் நடைமுறைப்படுத்துவது தொடா்பான அறிக்கையை தயாா் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோபால் ராய் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் நடந்த கூட்டத்தில், தில்லி சுற்றுச்சூழல் துறை, போக்குவரத்து துறை மூத்த அதிகாரிகள், தில்லி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது, இந்த பிரசார இயக்கத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பான கள அறிக்கையை வரும் திங்கள்கிழமைக்கு முன்பாக சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளை கோபால் ராய் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com