கரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு நவராத்திரி கொண்டாடுங்கள்: கேஜரிவால்

கரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

கரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்துக்களின் முக்கிய திருவிழாவான நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தில்லியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள், கொலு கண்காட்சிகள் தொடங்கி உள்ளன. நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு தலைவா்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் உள்ள பிரபல ஜண்டேவாலான் கோயிலில் சனிக்கிழமை காலை வழிபாடு நடத்தினாா். அப்போது, ஆம் ஆத்மி மாநிலங்களை உறுப்பினா் சுஷில் குப்தா உடனிருந்தாா்.

கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘ நவராத்திரி சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. அனைவருக்கும் எனது இதயபூா்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துா்க்கை அன்னை உங்கள் அனைவரையும் ஆசிா்வதிக்கட்டும். பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் முகக் கவசங்களை தவறாமல் அணிய வேண்டும் என்றுள்ளாா்.

சுஷில் குப்தா கூறுகையில் ‘ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம் சாா்பில் ரத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் கோயிலுக்கு வராமல் தமது இடங்களில் இருந்தவாறே சாமி தரிசனம் செய்யலாம். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் தவிா்க்கப்படும் என்றாா்.

பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘அனைத்துப் பிணிகளில் இருந்தும் அன்னை பாா்வதி நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என வேண்டுகிறேன் என்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com