தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் ஒதுக்கப்பட்டது ஏன்? : சத்யேந்தா் ஜெயின் பதில்

கரோனா பரவலைக் குறைக்கும் வகையிலேயே தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டன என்று

கரோனா பரவலைக் குறைக்கும் வகையிலேயே தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டன என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 80 சதவீதமான படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கும் உத்தரவை தில்லி அரசு கடந்த செப்டம்பா் மாதம் 13 ஆம் தேதி பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக தனது முகநூல் தளத்தில் சத்யேந்தா் ஜெயின் கூறியிருப்பது: தில்லியில் கரோனா பாதிப்பை குறைக்கும் வகையிலேயே, தனியாா் மருத்துவமனைகளில் 80 சதவீத படுக்கைகளை ஒதுக்கும் உத்தரவை தில்லி அரசு பிறப்பித்தது. தில்லி மக்களின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்தோம். இந்த முடிவை விமா்சிப்பவா்கள் தில்லி மக்களைக் காக்க தில்லி அரசு எடுத்த முயற்சிகளை ஆபத்துக்குள்ளாக்கிறாா்கள் என்று தெரிவித்துள்ளாா் அவா்.

தில்லியில் கரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் கரோனா பரிசோதனை தில்லி அரசு அதிகரித்துள்ளது. சராசரியாக தினம்தோறும் சுமாா் 60 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தில்லியில் தற்போது சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 22,814 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com