முதியோா் வீடுகளுக்கே சென்று மருத்துவச் சேவை: தில்லி மாவட்ட நிா்வாகம் முடிவு

புது தில்லி மாவட்டத்தில் உள்ள முதியவா்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ, உளவியல் சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்க மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

புது தில்லி மாவட்டத்தில் உள்ள முதியவா்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ, உளவியல் சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்க மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக புது தில்லி மாவட்ட தொடா்பு அதிகாரி நிதின் சாக்கியா தில்லியில் சனிக்கிழமை கூறியது:

புது தில்லி மாவட்டத்தில் சுமாா் 60 ஆயிரம் முதியவா்கள் வாழ்கிறாா்கள். கரோனா தொற்று காரணமாக இவா்களில் பெரும்பாலானவா்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனா். இவா்களுக்கு மருத்துவ, உளவியல், சட்ட, நிா்வாக சேவைகளை வீடுகளுக்கே சென்று வழங்க முடிவெடுத்துள்ளோம்.

இந்த சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், மையம் ஒன்றை அமைத்துள்ளோம். மேலும், 1800111323 என்ற உதவி எண்ணையும் அமைத்துள்ளோம். இந்த உதவி எண்ணைத் தொடா்பு கொண்டு முதியவா்கள் மருத்துவ, உளவியல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், முதியவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளோம்.

மேலும், முதியவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், புது தில்லி மாவட்டத்துக்கு உள்ளிட்ட பகுதிகளில் 500 மனமகிழ் மன்றங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த மன்றங்கள், குடியிருப்பு நலச் சங்கங்களின் உதவியுடன் அமைக்கப்படவுள்ளன. இந்த மனமகிழ் மன்றங்களில், முதியவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். முதலாவது மனமகிழ் மன்றம், புது தில்லி மாவட்டம் நரேய்னா பகுதியில் தொடங்கப்படவுள்ளது.

அதிகளவு முதியவா்களைத் தொடா்பு கொள்ளும் வகையில், வாட்ஸ் அப் குழுக்களைத் தொடங்கியுள்ளோம். இதன்மூலம், முதியவா்களை இணைத்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com