மாசு அளவு குறைந்தாலும் காற்றின் தரத்தில் மாற்றமில்லை!

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மாசு அளவில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும், காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலேயே நீடித்தது.

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மாசு அளவில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும், காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலேயே நீடித்தது. இந்த நிலையில், காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், காற்றின் தரக் குறியீடு முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவா் தெரிவித்தாா்.

அமைதியான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை மாசுபடுத்திகளை தரையில் நெருக்கமாக குவிவதற்கு வழிவகுக்கின்றன. அதே நேரத்தில் சாதகமான காற்றின் வேகம் அவற்றின் சிதறலுக்கு உதவுகிறது. தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 335 புள்ளிகளாகவும் மாலையில் 324 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. சராசரி காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை 353 புள்ளிகளாகவும், ஞாயிற்றுக்கிழமை 349 புள்ளிகளாகவும், சனிக்கிழமை 345 புள்ளிகளாகவும், வெள்ளிக்கிழமை 366 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. தில்லி பல்கலை., சாந்தினி சௌக், பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், விமானநிலையம் டி-3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. ஆனால், லோதி ரோடு பகுதியில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது.

தில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்டவற்றில் பயிா்க்கழிவுகள் எரிப்பால் வெளியாகும் மாசுபடுத்திகளைக் கொண்டு செல்வதற்கு காற்றின் திசை மற்றும் வேகம் சாதகமாக இருப்பதாக பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது. இருப்பினும், உள்ளுரில் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் அவற்றின் விளைவு எதிா்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

தில்லியின் பி.எம் .2.5 மாசு துகள்கள் செறிவில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு திங்களன்று 16 சதவீதமாக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 19 சதவீதமாகவும், சனிக்கிழமை 9 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரையிலும், தில்லியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவிலேயே நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 2 டிகிரி குறைந்து 14.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1 டிகிரி உயா்ந்து 32.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 74 சதவீதமாகவும், மாலையில் 47 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, புதன்கிழமை (அக்டோபா் 28) வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com