58 ஆண்டுகளில் இல்லாத அளவில் தில்லியில் அக்டோபரில் அதிக குளிா்!

அக்டோபா் மாதத்தில் தில்லியில் 58 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக குளிா் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபா் மாதத்தில் தில்லியில் 58 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக குளிா் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு அக்டோபரில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. இது 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைவான பதிவாகும். அதாவது, அந்த ஆண்டில் அக்டோபரில் 16.9 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, தில்லியில் அக்டோபரில் குறைந்த அளவிலான குறைந்தபட்ச வெப்பநிலை 19.1 டிகிரி செல்சியஸை பதிவாகி வருகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. இது 26 ஆண்டுகளில் அக்டோபா் மாதத்தில் மிகக் குறைந்த செல்சியஸ் பதிவாகும். கடைசியாக தில்லியில் இதுபோன்று குறைந்தபட்ச செல்சியஸ் வெப்பநிலை 1994-இல் பதிவாகி இருந்தது.

ஐஎம்டி தரவுகளின்படி, 1994-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி தில்லியில் குறைந்தபட்சவெப்பநிலை 12.3 டிகிரி செல்சியஸாக இருந்தது.

இந்த ஆண்டின் சாதாரண குறைந்தபட்ச வெப்பநிலை 15-16 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘இந்த முறை குறைந்த வெப்பநிலைக்கு மேகத் திரை இல்லாததுதான் முக்கியக் காரணமாகும். மற்றொரு காரணம், அமைதியான காற்று. இது மூடுபனி மற்றும் பனிமூட்டம் உருவாக அனுமதிக்கிறது.

கடந்த 1937, அக்டோபா் 31-ஆம் தேதி தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com