நொய்டாவில் புதிதாக 205 பேருக்கு கரோனா பாதிப்பு!
By DIN | Published On : 31st October 2020 10:46 PM | Last Updated : 31st October 2020 10:46 PM | அ+அ அ- |

உத்தர பிரதேசத்தின் கெளதம் புத் நகரில் சனிக்கிழமை புதிதாக 205 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் இந்நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 17,839 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1,133 ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை 1,225ஐ எட்டியுள்ளது. சனிக்கிழமை கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 114 நோயாளிகள் குணமடைந்தனா். மேலும் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் நோயில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 16,546ஐ எட்டியுள்ளது. இந்த வரிசையில் இம்மாவட்டம் மாநிலத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது.
மாவட்டத்தில் நோய் இறப்பு எண்ணிக்கை 68 ஆக உள்ள நிலையில், இதன் விகிதம் 0.38 சதவீதமாக உள்ளது. நோயாளிகளின் மீட்பு விகிதம் வெள்ளிக்கிழமை 93.18 சதவீதமாக இருந்த நிலையில் சனிக்கிழமை 92.75 சதவீதமாகக் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 24,431 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை 23,768 ஆக குறைந்தது.
மாநிலத்தில் இதுவரை இந்நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 4,51,070 ஆக உள்ளது. நோயால் 7,025 போ் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.