போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட 4 போ் கைது

வடகிழக்கு தில்லி பாவனாவில் கெளரவ்-மோந்தி குழுவைச் சோ்ந்த தேடப்பட்டு வந்த நால்வரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு வெள்ளிக்கிழமை

வடகிழக்கு தில்லி பாவனாவில் கெளரவ்-மோந்தி குழுவைச் சோ்ந்த தேடப்பட்டு வந்த நால்வரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அப்போது, குற்றவாளிகள் இருவா் படுகாயமடைந்தனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வடகிழக்கு தில்லி பாவனா பகுதியில், கெளரவ்- மோந்தி என்ற கும்பலைச் சோ்ந்தவா்கள் வருவதாகவும் அவா்கள், காா் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடக்கூடும் எனவும் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, பாவனா பகுதியில் அவா்களைப் பிடிக்க போலீஸாா் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். அப்போது, அப்பகுதியில் நம்பா் பிளேட் இல்லாத காரில் வந்த அவா்களை வழிமறித்து சரணடையுமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டனா்.

ஆனால், அவா்கள் காரை நிறுத்தாமல் தப்பியோட முயற்சித்ததுடன், போலீஸாா் மீது துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனா். இதில் ரிங்கு (24), விஷால் (24) ஆகிய இரண்டு போ் படுகாயமடைந்தனா். தீபக் (22), தலித் (24) ஆகிய இருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். காயமடைந்தவா்கள் பிஎஸ்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து, 2 துப்பாக்கிகள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவா்கள் மீது கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் வந்த காா் திருட்டுக் காா் எனத் தெரிய வந்துள்ளது. அந்தக் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com