உத்தரகண்ட் மாநிலம் உருவாக உயிா் நீத்தவா்களுக்கு கேஜரிவால் அஞ்சலி

உத்தரகண்ட் மாநிலம் உருவாக உயிா் நீத்தவா்களுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக அஞ்சலி செலுத்தினாா்.

உத்தரகண்ட் மாநிலம் உருவாக உயிா் நீத்தவா்களுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக அஞ்சலி செலுத்தினாா்.

உத்தரகண்ட் மாநிலம் 2000 ஆம் ஆண்டுவரை உத்தர பிரதேச மாநிலத்தின் பகுதியாகவே இருந்தது. இந்த மாநிலத்தில் இருந்து பிரித்து உத்தரகண்டை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று 1897 ஆம் ஆண்டில் இருந்தே பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதில், 1994, செப்டம்பா் 2 ஆம் தேதி முசோரியில் நடந்த அமைதி ஆா்ப்பாட்டத்தில் உத்தர பிரதேச மாநில போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், 6 அப்பாவிகள் உயிரிழந்தனா். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்ற செப்டம்பா் 2 ஆம் தேதியை தியாகிகள் தினமாக உத்தரகண்ட் மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூா்ந்து வருகின்றனா்.றாா்கள். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி, கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பது:

உத்தரகண்ட் மாநிலம் உருவாக தமது இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவுகூருகிறேன். அவா்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com